ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஆதரவை அறிவித்த கமல் ஹாசன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செயற்குழு உறுப்பினர்களுடன் சுமார் 1 மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறோம் எனக்கூறினார்.

ஈவிகேஸ்- க்கு ஆதரவு அளிப்பதும் அவருடைய வெற்றிக்காக நானும் எனது கட்சியை சேர்ந்தவர்களும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தார். மேலும் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தை நியமனம் செய்து இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது பூர்த்தியான ஒவ்வொரு வாக்காளரும் ஒன்றுகூடி தங்கள் வாக்குகளை தவறாது பதிவு செய்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் பங்கு பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.