ஈரோடு கிழக்கு தேர்தலில் யாருக்கு ஆதரவு; கமல் ஹாசன் அதிரடி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மையம் இதுவரை எந்த ஒரு நிலைப்பாடு எடுக்கவில்லை என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் நிலைப்பாடு குறித்து அதன் தலைவர் கமலஹாசன் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் நிர்வாகிகள் உடன் ஆலோசனையின் ஈடுபட்டார்.

அதன் பின்னர் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தல் வேட்பாளரான இ.வி. கே.எஸ் இளங்கோவன், எம்.எல்.ஏ.செல்வப் பெருந்தகை எம்.பி விஜய் வசந்த் மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா ஆகியோரை சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், மக்கள் நீதி மையம் காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் செயற்குழுவானது கூடி ஒரு நல்ல முடிவை தெரிவிப்போம் என கூறினார்.

மேலும், இதுவரை மக்கள் நீதி மையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.