ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு கொடுத்த தமாக… அப்படியெனில் போட்டியிடுவது யார்?

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ் மகன் ஈவேரா என்பவர் சமீபத்தில் காலமானதை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார் என்ற தகவல் இணையதளங்களில் கசிந்து வந்தது. குறிப்பாக திமுக என்ற தொகுதியை ஏற்கனவே விட்டுக் கொடுத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Gk vasanஅதேபோல் அதிமுக தரப்பில் இந்த தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு இருந்த நிலையில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதை அடுத்து அதிமுக இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன், தான் தொலைபேசியில் பேசியதாகவும், இது குறித்து முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

seeman5 1608784238

இந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவின் இன்னொரு பிரிவின் தலைவரான ஓபிஎஸ் 23ஆம் தேதி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அவரது தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளும் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் காரணமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.