ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை மார்ச் 2-ஆம் தேதி எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27 அன்று பதிவான 1,70,192 வாக்குகள் இங்குள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படும் என்று அதிகாரி கூறினார்.

மொத்தம் 2,27,547 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் போடப்பட்டு, 15 சுற்றுகளாக எண்ணும் பணி முடியும் என தெரிகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் 48-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போதிய அளவில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்பிஜி சிலிண்டருக்கு திமுக அரசு மானியம் வழங்கவில்லை: விஜயகாந்த்

வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள், பின்னர் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மாற்றினர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.