Connect with us

முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்: என்னவா இருக்கும்?

2 696x434 1

தமிழகம்

முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்: என்னவா இருக்கும்?

முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்: என்னவா இருக்கும்?

திமுகவினர்  முறைகேடுகள் தொடர்ந்தால் மேற்குவங்காளத்தைப்போல்  சட்டச்சபை முடங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் திமுகவிற்கு இல்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க ஸ்டாலின் ஏன் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வரவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்டு மக்களை ஏமாற்ற திமுகவினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவையை முடக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழகத்திலும் ஆளும்கட்சியினர் தொடர்  முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டசபையில் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் அடுத்த நாடாளுமன்ற  தேர்தலுடன்  நடத்த வாய்ப்பு உள்ளதாகவும், இன்னும் 27 மாதங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top