
தமிழகம்
பரபரப்பு!! ஓபிஎஸ் படத்திற்கு வெள்ளையடித்த இபிஎஸ் தொண்டர்கள்..
ஓபிஎஸ்-இன் பதவி காலாவதி ஆகி விட்டதாக சிவி சண்முகம் கூறிய நிலையில் விழுப்புரத்தில் போஸ்டர், சுவரில் எழுதப்பட்டிருந்த ஓபிஎஸ் உருவம் வெள்ளை பெயிண்டால் அளிக்கப்பட்டது.
அதிமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்ததால் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவி சண்முகம் ஓபிஎஸ்-இன் பதவி காலாவதி ஆகி விட்டதாக கூறினார்.
இதனால் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் வழக்கு மாவட்ட அதிமுக அலுவலகங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ்-யின் படம் மற்றும் பெயர்களை வெள்ளை பெயிண்ட் அடித்து முழுமையாக அகற்றியதுடன் சாலையோரங்களில் எழுதப்பட்டிருந்த ஓபிஎஸ் பெயர்களையும் அழித்தனர்.
பின்னர் ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இபிஎஸ்-யின் உருவப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு எடப்பாடி பழனிசாமி ஒழிக ஓபிஎஸ் வாழ்க என முழக்கங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
