பொறுப்புடன் பேசுங்க EPS ; செந்தில் பாலாஜி!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியிலிருந்து பார்த்துக் தெரிந்துகொண்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமது வீட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவது முறையில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கந்தப்பட்டி துணை மின்நிலையத்தில் புதிதாக கூடுதல் மின் மாற்றி அமைப்பதற்காக இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டதாக கூறினார்.

நேரம் இருந்தால் அதனை எதிர்க்கட்சித் தலைவர் நேரடியாகச் சென்று பார்த்து விட்டு பொறுப்புடன் பேச வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தனது தோழமைக் கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்கள் முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர் மின் தடை ஏற்படுகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி திரும்பிப்பார்க்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக அங்கெல்லாம் நிலக்கரி பற்றாக்குறை எவ்வளவு உள்ளது என தெரிந்து கொண்டு பின்னர் தமிழகத்தை பற்றி பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment