டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒற்றை தலைமை விவகாரத்தில் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் ஓபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது. குறிப்பாக ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது ஓபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதன் படி, அதிமுக இடைக்கால பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது செல்லும் என அறிவித்த நிலையில், வரும் நாட்களில் அதிமுகவில் பொது செயலாளர் தேர்தல் நடைப்பெறும் என இபிஎஸ் கூறினார்.
இந்நிலையில் நேற்று டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய சந்திப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.