Connect with us

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்!!

eps

தமிழகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரமானது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருடம் கடும் மோதல்கள் நிலவி வந்த நிலையில், இபிஎஸ் பக்கம் சாதகமாக தீர்ப்புகள் அடுத்தடுத்து வந்துகொண்டே உள்ளது.

குறிப்பாக பொதுக்குழு தொடர்பாக சென்னை நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பானது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதை உறுதிசெய்துள்ளது.

அதே போல் இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 72 நாட்களுக்கு பிறகு அதிமுகவில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திடீரென திருப்பதி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு திருப்பதி வந்த அவர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வணங்கினார்.

பின்னர் தேவஸ்தான் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கிதையடுத்து, கோயிலின் வெளியே வந்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி ஏழுமலையானை தரிசித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top