
செய்திகள்
இபிஎஸ்க்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இபிஎஸ்க்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இபிஎஸ் அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலை டெண்டரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 4,800 கோடி ஊழல் நடந்து இருப்பதாக இபிஎஸ் மீது குற்றச்சாட்டி எழுந்தது.
இது தொடர்பாக திமுகாவை சேர்ந்த ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எதிர்த்து இபிஎஸ் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த சூழலில் நேற்றைய தினத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கானது திடீரென விசாரணைக்கு வந்ததால் தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
