Connect with us

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் நுழையக்கூடாது – டிஜிபியிடம் புகழேந்தி புகார் மனு!!

edappadi pugazhendi

தமிழகம்

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் நுழையக்கூடாது – டிஜிபியிடம் புகழேந்தி புகார் மனு!!

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அறிவித்தது.

இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில் 72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தனர்.

இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது என்று டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இன்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இபிஎஸ் இன்று செல்ல இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பினர் இத்தகைய புகார் மனு கொடுத்து இருப்பதாக தெரிகிறது.

அதாவது, இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட கருத்தை தெரிவித்து இருப்பதால் தற்போது அதிமுக அலுவலகத்திற்கு இபிஎஸ் செல்வது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய மனுவானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top