களத்தில் கால் வைத்த ஈபிஎஸ்! மக்களின் குறைகளை கேட்டு நிவாரணம்!!

தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார்  ஸ்டாலின். அவர் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.

ஈபிஎஸ்

அதோடு மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவையும் பரிமாறிக் கொடுத்தார் முதல்வர் மு. .க .ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த இடங்களுக்குஆய்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தில் மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரும் பற்றி நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 மழை பாதிப்பு

மழை பாதிப்புகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.இதற்கு முன்னதாகவே அதிமுக தொண்டர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

வெள்ள பாதிப்பில் சிக்குண்டவர்களை முகாம்களுக்கு விரைந்து  அழைத்து செல்ல வேண்டுமென்றும் அதிமுக சார்பில் தொண்டர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print