சிக்கலில் இபிஎஸ்!! அதிமுக அலுவலக சாவி வழக்கில் திடீர் திருப்பம்!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைத்தலைவலி விவகாரம் என்பது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அப்போது அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதன் காரணமாக வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி மீண்டும் அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment