ஈபிஎஸ்-க்கு எதிரான கண்டன போஸ்டர் – மதுரையில் பரபரப்பு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமானது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் திருமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் 115 சாதிகளை வஞ்சித்து, ஒரே சாதிக்கு மட்டும் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதோடு எங்கள் பகுதிக்கு வராதீர் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.

அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் இபிஎஸ்- வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவர் கூட்டமைப்பினர் என்ற பெயரில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

அதில் 115 சாதிகளை வஞ்சித்து விட்டு ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ஊருக்குள் வராதீர் என்ற வாசகங்கள் போஸ்டரில் அடங்கியுள்ளது.

மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய போஸ்டர் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.