Connect with us

ஒரு போஸ்டரால் EPS! ஜெயக்குமாரை வச்சு செய்யும் OPS அணியினர்;;

ஓபிஎஸ் ஈபிஎஸ்

தமிழகம்

ஒரு போஸ்டரால் EPS! ஜெயக்குமாரை வச்சு செய்யும் OPS அணியினர்;;

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், இபிஎஸ்-க்கு கடுமையான விமர்சனங்களுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு போஸ்டர்களை ஒட்டுவதில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் இரு தரப்பினரும் பல்வேறு போராட்டங்கள் உருவ பொம்மை எரிப்பது போன்றவற்றின் மூலம் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தொண்டர்கள் என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர்.

அதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாவின் அரியனை சிம்மாசனத்தை அப்படியே திருப்பி கொடுத்த பண்பாளர் ஓபிஎஸ்-க்கு தொண்டர்களின் ஆதரவு என்ற வாசகமுகம் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த போஸ்டர்களை கின்னிமங்கலம் அதிமுக கிராம செயலாளர்  செல்வம்  என்பவர் நகர் முழுவதும் ஒட்டியதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top