Connect with us

அதிமுக பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் மனு நாளை விசாரணை!!

ops eps hc5 1657621628

தமிழகம்

அதிமுக பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் மனு நாளை விசாரணை!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை நாளை பட்டியலிடப்படுவதாக  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளர்.

கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டமானது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையானது கடந்த சில தினங்களுக்கு முன் அமர்வுக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதோடு மீண்டும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை  ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என தெரிவித்திருந்தார்.

இத்தகைய தீர்ப்பிற்கு இபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இத்தகைய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையானது இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த சூழலில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உண்மை நகல் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அதற்கு அனுமதி வழங்குமாறு இபிஎஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது நாளை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top