
செய்திகள்
தோல்வியை ஒப்புக்கொள்ளாத ஈபிஎஸ்-ஓபிஎஸ்!! அமைச்சர் பெரியகருப்பனின் கடும் கண்டனம்!!!
தோல்வியை ஒப்புக்கொள்ளாத ஈபிஎஸ்-ஓபிஎஸ்!! அமைச்சர் பெரியகருப்பனின் கடும் கண்டனம்!!!
தற்போது நம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கட்சியானது வரலாறு காணாத வெற்றி பெற்றது. திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சந்தோஷம் காணப்பட்டது.
அதிமுகவும் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து கடுமையாக விமர்சித்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோரின் அறிக்கைக்கு தற்போது அமைச்சர் பெரியகருப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அறிக்கையில் திமுக வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு நிகழ்ச்சியைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை என்றும் கூறினார்.
மாநில தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடு நிலையுடனும் தேர்தலை நடத்தியது என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
தோல்வியை ஒப்புக் கொள்ளவும், மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் இருவருக்குமே மனம் இல்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை திமுகவுக்கு மக்கள் அளித்து விட்டார்கள் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
