“இன்னைக்கு யார் சட்டை கிழியப்போகுதோ”… ஈபிஎஸ் – ஓபிஎஸ் டீம் பேரவைக்கு வருகை!

பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருகை புரிந்துள்ளனர்.

கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற வினாவிற்கு விடை தெரியும் என்ற எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. நேற்று சரியாக 9.50 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் கூட்டாக வந்தனர். பேரவை வளாகத்திற்குள் சென்று கையெழுத்திட்ட பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்துள்ளனர். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருகை புரிந்துள்ளார். இன்றைய தினம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் கடிதம் குறித்த பிரச்சனையை அதிமுக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment