ஈபிஎஸ், ஓபிஎஸ் குருபூஜையை புறக்கணிக்கவில்லை! மனைவி மரணம், உடல்நலக்குறைவு இதனால்தான் வர முடியவில்லை!!

இன்றைய தான் தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான அரசியல் தலைவர்களும் அவரின் திருவுருவம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.சீனிவாசன்

ஆனால் எதிர்க்கட்சி சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்க வில்லை என்று குற்றச்சாட்டு பரவியது. இது குறித்து தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி பசும்பொன் தேவர் குருபூஜையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கவில்லை என்று அவர் கூறினார்.

மனைவியின் மரணம் காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குருபூஜையில் பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

அதோடு மட்டுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்தார். தேனியில் அதிகளவு பன்னீர்செல்வம் மரியாதை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment