தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்: எதற்காக தெரியுமா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாகவே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளும் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளை ஆய்வு செய்யும் போது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் தொடர்! இந்திய அணி அபார வெற்றி!!

அதே போல் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பல்வேறு இடங்களில் பேசியுள்ளார். இந்த நிலையில் இபிஎஸ்-யின் ஆளுநர் சந்திப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் தமிழக நலம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் நாளை மதியம் 12.45 மணிக்கு சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாஜக கூட்டங்களில் பங்கேற்க தடை- சூர்யா சிவாவுக்கு அதிரடி!!

மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.