Connect with us

அதிமுகவின் ஒற்றை தலைமை ஈபிஎஸ் தான்!!: ஜெயக்குமார் பகிரங்க பேட்டி

பழனிச்சாமி

தமிழகம்

அதிமுகவின் ஒற்றை தலைமை ஈபிஎஸ் தான்!!: ஜெயக்குமார் பகிரங்க பேட்டி

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் பெரும் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது.  அதிமுகவின் இரு பெரும் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே ஒற்றுமை போர் அதிகரித்துள்ளது.

இதனால் இரு தரப்பிலிருந்தும் அடுத்தடுத்து அதிரடியான முடிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

மேலும் நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள்; அம்மா மனதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என்று பேட்டியளித்தார்.

இந்த நிலையில் ஒற்றை தலைமை இபிஎஸ் தான் என்று தற்போது ஜெயக்குமார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவுக்கு ஒற்றை தான் அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறியுள்ளார். கூட்டத்தை நடத்த தலைமை நிலைய செயலாளருக்கு உரிமையுண்டு இன்று கட்சி அலுவலகத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது என்றும் அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானது அவைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடை பெற்றதாகவும் அவர் கூறினார்.

இன்றைய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன, அவை எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது என்றும் பகிரங்கமாக பேட்டியளித்தார். 74 தலைமைகழக நிர்வாகிகள் 65 பேர் இன்றைய தின ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும் கூறினார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்திற்கு வர முடியவில்லை என ஐந்து பேர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top