பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முடிவை கைவிடக் கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு எப்பவுமே தீராத பிரச்சினையாக இருப்பது அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பகிர்வு தான். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை, கர்நாடாகவில் காவிரி நதிநீர் பங்கீடு, அதேபோல் ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் முயற்சி.

இந்த மூன்று பிரச்சினைகளும் ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் இறுதியான முடிவையும் எட்டவில்லை. ஆட்சிகள் மாறிக் கொண்டே இருந்தாலும் பிரச்சினைகளும் தீர்ந்தபாடில்லை. தற்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றபின் அடுத்தடுத்து பல அதிரடித் திட்டங்களைத் தீட்டி வருகிறார்.

அந்த வகையில் இன்று பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று ‘கூறியிருக்கிறார். ஆந்திரமாநிலம் சித்தூரில் கால்வாய் கட்டும் பணியைப் பார்வையிட்ட பின் பாலாற்றின் குறுக்கே மாதவப் பள்ளி, யாதவப் பள்ளி ஆகிய இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு, அதனைப் பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு என்று கூறியிருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கருத்து தற்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

இது இரண்டாவது சுதந்திரப் போர்.. காந்திய வழியில நீங்க.. நேதாஜி வழியில நான்.. வெளியான இந்தியன் 2 டிரைலர்

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வரை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்தப் பதிவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews