தேவர் திருவுருவப்படம் மற்றும் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

இன்றைய தினம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதுவும் குறிப்பாக தென்தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.ஈபிஎஸ்

தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற முதல் கிராமம் வரைக்கும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார்.

அதன்படி சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இது போன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனியில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment