இபிஎஸ் வெளியே செல்லாதது ஏன்? – அமைச்சர் சேகர்பாபு!!

தமிழகத்தில் 3 நாட்களாக மழை பாதிப்பு குறித்து இபிஎஸ் ஆய்வு செய்யாதது ஏன்? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை திரு.வி.க மண்டலத்தில் வெள்ளம் பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டிற்கும் நடிவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!!

இதில் மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என கூறினார்.

அதே போல் திரு.வி.க நகரில் 95% மழைநீர் தேங்கவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் இபிஎஸ் இதுவரையில் ஏன்? ஆய்வு செய்யவில்லை என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment