Tamil Nadu
ஓபிஎஸ்-ஐ அடுத்து டெல்லி விரைகிறார் ஈபிஎஸ்: நாளை பிரதமருடன் சந்திப்பு என தகவல்
பிரதமர் மோடியை சந்திக்க இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்ற நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சற்று முன் வெளியான தகவலின்படி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாகவும் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது
கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர், ஈபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ் அவர்களுடன் இணைந்து நாளை பிரதமரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
