அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூம் எடுத்திற்கும் நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை செயலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் மகன் உட்பட 18 பேரை அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, V.N.P. வெங்கட்ராமன், இரா. கோபாலகிருஷ்ணன், திரு. வெல்லமண்டி N. நடராஜன், திரு.S.P.M. சையதுகான்,திரு.R.T. ராமச்சந்திரன் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் M.G.M. சுப்பிரமணியன், S.A. அசோகன், திரு. ஓம்சக்தி சேகர், திரு.ப. ரவீந்திரநாத், வி.ப. ஜெயபிரதீப், கோவை செல்வராஜ், திரு. மருது அழகுராஜ், திரு. அம்மன் P. வைரமுத்து, D.ரமேஷ், B. வினுபாலன், D. கிருஷ்ணமூர்த்தி, M.M. பாபு மற்றும் S.R. அஞ்சுலட்சுமி ஆகியோர் இன்று முதல் கழக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதன் காரணமாக இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.