Connect with us

இபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு: நாளை காலை தீர்ப்பு!!

Capture 6

தமிழகம்

இபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு: நாளை காலை தீர்ப்பு!!

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த ஜூலை-11ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அமர்மானது கடந்த சில தினங்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதி ஜூலை-11ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவித்திருந்தார். இத்தகைய உத்தரவானது இபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இபிஎஸ், நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதன் ஒரு பகுதியாக  இந்த வழக்கு கடந்த் வாரம்  விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.

அதோடு தீர்ப்பை அறிவிக்காமல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top