Connect with us

“நீட் தேர்வு” பேரவையில் ஈபிஎஸ்-முதல்வர் காரசாரம்!!

News

“நீட் தேர்வு” பேரவையில் ஈபிஎஸ்-முதல்வர் காரசாரம்!!

03494e63ba1af34d52ea0db95ca3a068

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் கூறிய வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்ற மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். மேலும் அவர்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியில் மிகவும் பெரிதான பார்க்கப்பட்டது நீட் தேர்வு ரத்து.  ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.4545411dc8fbb3e31f3e0922f0687d80-1

இது குறித்து இன்றைய தினம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியோடு காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அதன்படி தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி நீட் தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் வாதிட்டார். மேலும் ஜெயலலிதா இருக்கும்போது நீட்தேர்வு வரவில்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியிருந்தார்.

மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதாக எடப்பாடிபழனிசாமி பதிலளித்தார். மேலும் தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதன்படி மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் மாணவர்  தற்கொலை தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்காததால் வெளிநடப்பு என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையால் பெற்றோர்கள் மாணவர் குழப்பத்தில் உள்ளனர் என்றும்  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது சாத்தியமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top