இரட்டை இலை சின்னம் யாருக்கு? திங்கட்கிழமை வழக்கு பட்டியலில் ஈபிஎஸ் முறையீடு சேர்ப்பு!!

தற்போது ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் முன்னிட்டு திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் எதிரொலியாக யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு பல கட்சிகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் நீதி மையம் சார்பிலும் இபிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தருவதாக உலகநாயகன் கமலஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக சார்பில் இருந்து யார் போட்டியிடுவார் என்று கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் நிலவிக் கொண்டு வருகிறது.

ஏனென்றால் அதிமுகவில் இருந்து தலைவர்களாக உள்ள ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும் சுற்றுவட்டாரங்களில் தகவல்கள் பரவிக் கொண்டு வருகிறது.

இந்த வேலையில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று தொண்டர்களிடையே குழப்பம் அணிந்து வந்த நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கப்படவில்லை என்று தகவல் கிடைத்தது.

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு வருகின்ற திங்கட்கிழமை வழக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிச்சாமியின் முறையீடு திங்கட்கிழமை வழக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்பட்டததால் அதிமுக விவகாரத்தை மூன்றாவது வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி பழனிச்சாமி முறையீடு செய்திருந்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்க கோரியும் முறையீடு செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.