News
மீண்டும் இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது பெரும் கவலையை அளித்து வருகிறது. 500 க்கும் குறைவாக கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 500க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளது
அதன் அடிப்படையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வழியாக தமிழகம் வருவோர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற புதிய நிபந்தனை விதித்துள்ளது
புதுச்சேரி கர்நாடகா ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களிலிருந்து கொரோனா தொற்று மிகவும் மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ் பரவி உள்ளதால் கேரளாவிலிருந்து வரும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
