நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தான் “சுற்றுச்சூழல் மாசு” ஏற்படுகிறது!!

32c62728dd57136836b02051cde687d0

தற்போது தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் ஆனது பல்வேறு உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசிற்கும் உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாக கூறிக் கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு உத்தரவை தமிழக அரசிற்கு பிறப்பித்துள்ளது ஹைகோர்ட். அதன்படி நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விடுமுறை காலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது உறுதி செய்ய வேண்டும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.585937b45588646034801963425bee7c-1

கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீலகிரியில் குடியிருப்பு கட்டடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கிறார்களா என்பதை குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. சட்டவிரோத ரிசார்ட்களும் அதிகம் உள்ளது என்று ஹை கோர்ட் கூறியுள்ளது. நீலகிரி சட்டவிரோதமாக கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த தடை கோரிய வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment