மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு! சொன்ன வாக்கை நிறைவேற்றிய ஸ்டாலின்!!

மாணவர்

இன்றைய தினம் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து பள்ளிக்கு செல்கின்றனர்.ஸ்டாலின்

அதோடு மட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு மலர் மற்றும் இனிப்பு போன்றவைகள் கொடுக்கப்பட்டு சந்தோசத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் வரவேற்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை மடுவங்கரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து விட்டு திரும்பும் வழியில் மடுவங்கரை பள்ளியை ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு வருகை புரிந்தது எவ்வாறு உள்ளது? என்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழகத்தில் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மடுவங்கரை பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print