நீ ஆம்பிளதானே: பாலாஜியை வெறுப்பேற்றிய ஆரி!


 

 

பாலாஜியை அவ்வப்போது ஆரி வெறுப்பேற்றி வருவதும் அதனால் பாலாஜி கோபப்படுவதும் இதன் காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வருவதும் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகளாக உள்ளன 

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் பாலாஜியை கமல்ஹாசன் வறுத்து எடுத்த போதிலும் மீண்டும் திங்கள் முதல் ஆரியுடன் சண்டை போடுவதிலேயே பாலாஜி குறியாக உள்ளார். நேற்றும் கூட பிக் பாஸ் வீட்டில் இருவரும் உட்கார்ந்து கொண்டே போட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

aari balaji fight

இந்த நிலையில் இன்றைய டாஸ்கின்போதும் பாலாஜி ஆரியுடன் சண்டை போட்டதும், டாஸ்கின்போது இருவரும் வாக்குவாதம் செய்த நிலையில் திடீரென ‘நீ ஆம்பள தானே’ என்று ஆரி கேட்டபோது பாலாஜி பயங்கரமாக கோபம் அடைந்து அவரும் பதிலுக்கு ஆரி பற்றி கூறுகிறார். இருவரும் சண்டை போடுவதை அதிர்ச்சியுடனும் பயத்துடனும் மற்ற போட்டியாளர்கள் பார்த்து வருகின்றனர் 

ஏற்கனவே ஃபினாலே டாஸ்க்கில் இதுவரை மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பாலாஜி தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பதும் ஆரி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web