இரு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞர்: விஜய் செய்த உதவி!

 

வேலூர் அருகே இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞர் ஒருவருக்கு விஜய்யின் உத்தரவால் விஜய் மக்கள் இயக்கம் உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

வேலூர் மாவட்டம் சவலன்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் 18 வயதான ரவி என்ற இளைஞர் தள்ளுவண்டி சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். குழந்தைப் பருவத்திலிருந்து இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தால் நாளடைவில் இந்த கோளாறு முற்றி, தற்போது இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து இவரது பெற்றோர்கள் தங்களது சேமிப்பில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை செய்தனர். ஆனால் அவருக்கு சிறுநீரக கோளாறு முற்றியதால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு ரூபாய் 12 லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறியதாகவும் தெரிகிறது

அந்த அளவுக்கு தங்களிடம் பணம் இல்லாத நிலையில் அரசு மற்றும் அரசு அமைப்புகள் தொண்டு நிறுவனங்களின் உதவியை ரவியின் பெற்றோர்கள் நாடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜய், தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த இளைஞருக்கு உதவ உத்தரவிட்டதாகவும் இதனையடுத்து ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் திரட்டி இளைஞரின் பெற்றோரிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினார்கள் என்றும், மேலும் தங்களால் ஆன அளவு பணம் திரட்டி தருவதாகவும் வாக்களித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web