இளம் தலைவரே! நாளைய முதல்வரே: விஜய் ரசிகர்களின் பரபரப்பான போஸ்டர்கள் 

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் கட்சி ஆரம்பித்து வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை 

இந்த நிலையில் தற்போது திடீரென நடிகர் விஜய் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய விஜய் அரசியலில் இறங்குவது குறித்து நிர்வாகிகளுடன் பேசியதாக தெரிகிறது

இந்த நிலையில் திருச்சியில் திடீரென விஜய் அரசியலுக்கு வரும் வகையிலான போஸ்டர்களை அடித்து அவரது ரசிகர்கள் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களைக் கண்ட தமிழகம் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே’ என்று விஜய் குறித்து அந்த போஸ்டர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web