கடற்கரையில் கலக்கும் இளம் நடிகை...!

மீண்டும் களத்தில் இறங்கிய நடிகையின் போட்டோ ஷூட்...!
 
லைக்ஸ் மழைபெய்யும் நடிகை ஐஸ்வர்யா மேனனின் ட்விட்டர் பக்கம்....,

"காதலில் சொதப்புவது எப்படி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் "நடிகை ஐஸ்வர்யா மேனன்". நடிகை ஐஸ்வர்யா மேனன் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். நாட்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியாகிய"நான் சிரித்தால்" படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருப்பவர். இத்திரைப்படத்தில் இவர் "நடிகர்", "இசையமைப்பாளர்","பாடகர்" என பன்முக கலைஞரான "ஹிப்ஹாப் தமிழா" என்றழைக்கப்படும் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது .மேலும் இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு பலத்த ரசிகர்கள் கூட்டம் உருவாக்கியது.

iswarya menon

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது "தமிழ் படம்" என்ற திரைப்படம். இத்திரைப்படத்தில் "நடிகர் சிவா நடித்திருப்பார்". இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் "தமிழ் படம் 2" என்ற பெயரில் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. இத்திரைப்படத்தில் நடிகர் சிவாவுக்கு,நடிகை ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்திருந்தார்.


மேலும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபல நடிகரும் "ஜிகர்தண்டா" திரைப்படத்தின் கதாநாயகனுமான நடிகர் சித்தார்த்துடன் "தீயா வேலை செய்யணும் குமாரு", "காதலில் சொதப்புவது எப்படி" என்ற இரு திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது ஹிட்டடித்தது.தற்போது நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ள அவரது ஃபோட்டோ ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

From around the web