உனக்கு மட்டும் 2020 மாஸா போகுது: விக்னேஷ் சிவனுக்கு கமெண்ட் அளித்த ரசிகர்

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கிய பின்னர் கூடுதல் சிறப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வருகிறார் 

அந்த வகையில் இன்று அவர் கிறிஸ்மஸ் பண்டிகையை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். கடந்த சில நாட்களாக ரஜினியின் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா எதிர்பாராதவிதமாக அந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது விக்னேஷ் சிவனுடன் இல்லாத நிலையில் இன்று கிறிஸ்மஸ் திருவிழாவை அடுத்து இருவரும் இணைந்து சிறப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்

nayan

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான நட்சத்திரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட அறையில் நயன், விக்னேஷ் இருவரும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த புகைப்படத்தில் நயன்தாரா கவர்ச்சி உடன் அட்டகாசமாக உள்ளதை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web