உங்க திறமைக்கு ஆயிரம் படம் கிடைக்கும், இது வேண்டாம்: விஜய்சேதுபதிக்கு அறிவுரை கூறிய இயக்குனர்

 

உங்கள் திறமைக்கு 1000 திரைப்படங்கள் கிடைக்கும், இந்த ஒரு படம் மட்டும் வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் ’800’ திரைப்படத்திற்கு தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை வரலாறு மட்டும் தான் இந்த படத்தில் இருக்கும் என ஏற்கனவே படக்குழுவினர் விளக்கம் அளித்த போதிலும் எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை

ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என அறிவுரை கூறி வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் சீனு ராமசாமி கவிஞர் தாமரை உள்ளிட்டோர் இதுகுறித்து அறிவுரை கூறி உள்ளனர் 

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை விரைவில் இயக்கப்போவதாக கூறப்படும் இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:  உலகம் முழுவதுமிருந்து  தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.

சேரனின் அறிவுரையை ஏற்று விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் நடிப்பதில் விஜய் சேதுபதி உறுதியாக இருப்பதாகவும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்க போவதில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web