ரம்யாவை உங்களால் ஏமாற்ற முடியாது பிக்பாஸ்: நெட்டிசன்கள் கலாய்ப்பு!

 

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒன்று அல்லது இரண்டு காதல் ஜோடிகளை வேண்டுமென்றே உருவாக்கி நிகழ்ச்சியை பரபரப்பு ஆக்குவது பிக்பாஸ் நிர்வாகிகளின் தந்திரமாக இருந்து வந்தது. கடந்த சீசனில் கூட கவின் - லாஸ்லியா  காதலை வைத்த கிட்டத்தட்ட பாதி நிகழ்ச்சியை ஓட்டிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் இந்த சீசனிலும் பாலாஜி மற்றும் ஷிவானி காதலை ஆரம்பித்து வைத்த காட்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தனர். ஆனால் இந்த காதலில் ஷிவானி கொஞ்சம் ஒட்டாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென சோம் மற்றும் ரம்யா காதலை பிக்பாஸ் தொடக்கி வைத்துள்ளார் 

ramya task

இன்றைய ’பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் ஜோடியாக நடிப்பதாகவும் அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக நடத்துவார்கள் என்றும் புரமோஷன் வீடியோவில் காட்சிகள் உள்ளன

இதனை அடுத்து பாலாஜி மற்றும் ஷிவானியை கோர்த்து விட்டது போல் ரம்யாவை சோம் உடன் கோர்த்து வைக்க உங்களால் முடியாது பிக்பாஸ் என்றும், ஏனெனில் ரம்யா புத்திசாலி என்றும் நெட்டிசன்கள் புரமோஷன் வீடியோவுக்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து கலாய்த்து வருகின்றனர் 

சுரேஷின் தந்திரத்தை கண்டுபிடித்த ஒரே நபர் ரம்யா என்பதும் ரம்யா மிகவும் ஆபத்தான போட்டியாளர் என்று சுரேஷ் வெளியேறும்போது கூறினார் என்பதும் ரம்யா உண்மையிலேயே புத்திசாலி என்பதற்கு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web