நயன்தாராவை அடுத்து அஞ்சலியுடன் யோகிபாபு: பரபரப்பு தகவல்

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் முக்கிய வேடத்தில் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்த யோகி பாபு தற்போது அஞ்சலியுடன் நடிக்க உள்ளார். அஞ்சலியுடன் ஒரு சில திரைப்படங்களில் யோகிபாபு நடித்திருந்தாலும் இந்த படத்தில் அஞ்சலியுடன் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

அஞ்சலி மற்றும் யோகிபாபு இருவரும் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள படத்தை சினிஷ் என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பதும் கிருஷ்ணன் ஜெயராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

anjali yogi

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் வேறு சில முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 

அஞ்சலி மற்றும் யோகி பாபு முதல் முறையாக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web