பத்தே மாதத்தில் அப்பாவான யோகிபாபு: வாழ்த்து மழை பொழிந்த திரையுலகினர்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆன நிலையில் சரியாக பத்தே மாதங்களில் அவர் தற்போது அப்பாவாகியுள்ளார்
யோகி பாபுவின் மனைவி கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் சற்று முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என தகவல் வெளிவந்துள்ளது
இதுகுறித்து நடிகர் மனோபாலா தனது டுவிட்டரில் ’நண்பர் யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மிக்க மகிழ்ச்சி தாயும் சேயும் நலம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து யோகிபாபுவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
நடிகர் யோகிபாபு தனது குலதெய்வம் கோவிலில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார் என்பதும் திருமணத்துக்குப்பின் பத்தே மாதங்களில் அவர் அப்பா ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது