சூப்பர்ஹிட் ரீமேக் படத்தில் இணைந்த யோகிபாபு!

 
சூப்பர்ஹிட் ரீமேக் படத்தில் இணைந்த யோகிபாபு!

ஒரு மொழியில் ஹிட்டான திரைப்படங்கள் மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான ’தி கிரேட் இந்தியன் கிட்சென் என்ற திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது 

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் யோகி பாபு தற்போது இணைந்துள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. யோகிபாபுவுக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது

aiswarya rajesh

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலை அள்ளி குவித்த இந்த திரைப்படம் தமிழிலும் அதேபோல் வெற்றி பெறும் என்றும் குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக இந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

From around the web