யோகி பாபு சிக்ஸ் அடிக்க,பிரசாந்த் பந்து போட; வேற லெவல் வைரலாக பரவுது!

படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த அந்தகன் படக்குழுவினர்!
 
யோகி பாபு சிக்ஸ் அடிக்க,பிரசாந்த் பந்து போட; வேற லெவல் வைரலாக பரவுது!

முன்னொரு காலத்தில் ரஜினி கமலுக்கு பின்னர் இவரே இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சில காலமாக சினிமாவில் அவர் வலம் வரவில்லை. இவர் யார் என்றால் நடிகர் பிரசாந்த். மேலும் இவர் நடிப்பில் வெளியான வின்னர் என்ற திரைப்படம் மக்களிடையே நல்லதொரு சிறப்பான வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஜீன்ஸ் திரைப்படமும் மக்களுக்கு மிகவும் இன்பத்தையும் பரிசையும் கொடுத்தது.yogibabu

இவர் தற்போது மீண்டும் சினிமாவில் வர உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி அவர் அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதனை பிரபல இயக்குனர் தங்கராஜன் இயக்கிவருகிறார். மேலும் இத் திரைப்படமானது ஒரு ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படத்தில் பிரபல நடிகை சிம்ரன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் பிரபல காமெடியன் யோகி பாபு மற்றும் குணச்சித்திர நடிகர் சமுத்திரக்கனி, நடிகை பிரியா ஆனந்த் மற்றும் வனிதா விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

 இந்த படக்குழுவினர் தற்போது தாங்கள் விளையாடிக் கொண்டிருந்தால் வீடியோ ஒன்று இணையதளத்தில் ஷேர்செய்துள்ளனர். அதன்படி படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவுகிறது .மேலும் குறிப்பாக அதில் யோகி பாபு பேட்டிங் செய்வது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை எழுப்பியுள்ளது.

From around the web