அட!நல்லா இருக்கே மக்கள் செல்வன் வெளியிட்ட டீஸர்...,

"டபிள்யூ டபிள்யூ டபிள்யூ" படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன்...!
 
ரமேஷ் பாலாவின் ட்விட்டரை பக்கத்தை கலக்கும் மக்கள் செல்வன்....!

தனது கடின உழைப்பாலும் விடா முயற்சியினாலும் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பவர் "நடிகர் விஜய்சேதுபதி ".ஆரம்பகாலத்தில் சிறிய கதாப்பாத்திரமாக தோன்றி இன்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் இவர் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படுகிறார்.

vijay sethupathi

இவர் நடிப்பில் வெளியாகிய "நானும் ரவுடி தான்" என்ற திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  இவர் நடிப்பில் வெளியாகிய 96 ,தர்ம துரை போன்ற படங்கள் இவருக்கு வெற்றியாக அமைந்தது. தற்போது இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த "மாஸ்டர்" திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு இவர் வில்லனாக நடித்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டார்.

மேலும் இவர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்துடன் "பேட்ட" என்ற திரைப்படத்திலும்  நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி "டபுள்யூ டபுள்யூ டபுள்யூ" என்ற திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசரை காணும்போது இத்திரைப்படம் இன்டர்நெட்டை மையமாக வைத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திரைப்படத்தினை இயக்குனர் "குகன்" இயக்கியுள்ளார்.இந்நிலையில் இப்படத்தின்  டீஸரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் என்று ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web