வர்மா பட தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடாதது சரியா

சில மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படத்தின் தழுவலாக வர்மா படம் இயக்கப்பட்டது. இந்த படத்தை இயக்கியவர் பாலா. தமிழின் முன்னனி இயக்குனரான பாலா இந்த படத்தை சொதப்பி விட்டார். காட்சிகளை சரியாக எடுக்கவில்லை ஒரிஜினல் தெலுங்கு படத்தின் ஆன்மா இந்த படத்தில் இல்லை என குற்றம் சாட்டி முழுவதுமாக பணிகள் முடிந்த ஒரு படம் வராது அந்த படம் இன்னொரு இயக்குனரை வைத்து இயக்கப்படும் என கூறியுள்ளது. இது ஒரு தவறான
 

சில மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படத்தின் தழுவலாக வர்மா படம் இயக்கப்பட்டது. இந்த படத்தை இயக்கியவர் பாலா. தமிழின் முன்னனி இயக்குனரான பாலா இந்த படத்தை சொதப்பி விட்டார். காட்சிகளை சரியாக எடுக்கவில்லை ஒரிஜினல் தெலுங்கு படத்தின் ஆன்மா இந்த படத்தில் இல்லை என குற்றம் சாட்டி முழுவதுமாக பணிகள் முடிந்த ஒரு படம் வராது அந்த படம் இன்னொரு இயக்குனரை வைத்து இயக்கப்படும் என கூறியுள்ளது.

வர்மா பட தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடாதது சரியா

இது ஒரு தவறான முன் உதாரணம் என்றே சினிமா நோக்கர்கள் கூறுகின்றனர். பெரிய இயக்குனர் ஆக இருந்தாலும் சிறிய இயக்குனர் ஆக இருந்தாலும் இது போல குற்றம்சாட்டி இது போல படமே தேவையில்லை என சொல்வதும் சினிமாவில் தவறான முன் உதாரணம் ஆகி விடும்.

எத்தனையோ படங்கள் நல்ல படங்கள் என நினைத்து வெளியிட்டு அது இடைவேளை வரை கூட பார்க்க முடியாத படமாக இருக்கும் என்பதை நாம் அறிந்திருப்போம். இருந்தாலும் அந்த இயக்குனரின் அடுத்த படத்தில் சரி செய்து கொள்வார் என நம்பி இருப்போம் அதன்படியே அடுத்த படத்தில் அட்டகாசப்படுத்தி விடுவார் இயக்குனர்.

ஆனால் இது போல படத்தையே வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சொல்வது ஒரு இயக்குனரின் எதிர்காலத்தையும் படைப்பாற்றலையும் சிதைப்பது போல் உள்ளது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

படத்தை இயக்கவே தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குவது போல் இது போல் நிகழ்வுகள் அமைகிறது.

தேவ் என்ற கார்த்தி நடித்த படம் பலத்த எதிர்பார்ப்புடன் வந்தது. வந்த உடன் அது மொக்கை என விமர்சிக்கப்படுகிறது. இதனால் அந்த இயக்குனர் சோர்ந்து விட போவதில்லை கண்டிப்பாக அவருக்கு வேறு தயாரிப்பாளர் கிடைப்பார் படத்தை சக்ஸஸ் செய்வார். இதுதான் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களாகும்.

அதற்காக படம் வருவதற்கு முன் தேவ் படத்தை பார்த்த ப்ரொட்யூசர் என்ன படம் எடுத்துருக்க இந்த படத்தை நான் வெளியிடபோவதில்லை என அறிவித்தால் அந்த இயக்குனரின் திரையுலக வாழ்வு அஸ்தமனமாகிவிடும்.

படம் வந்த பிறகு வெற்றியோ தோல்வியோ அதை ஏற்றுக்கொள்வதுதான் நல்லது.

விக்ரமின் மகன் துருவ் நடித்த முதல் படம் மோசமாகி விடக்கூடாது என அவரை திரும்ப வேறு இயக்குனரை வைத்து நடிக்க வைக்க பட நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விக்ரமின் பல படங்கள் தோல்வி ஏன் மிக பிரபலமான அந்நாளைய இயக்குனர் ஸ்ரீதர், எஸ்.பி முத்துராமன் இயக்கிய விக்ரம் நடித்த படங்களே தோல்விதான்.

பின்பு பாலாவின் சேது படம்தான் அவரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் அறிமுகமானார் படம் சொதப்பல்தான்.

அதற்காக கெளதம் கார்த்திக்குக்கு வாய்ப்பு வராமல் இல்லை இன்று வரை பிஸியாகவே நடித்து கொண்டிருக்கிறார்.

வெற்றியோ தோல்வியோ வர்மா படத்தை வெளியிட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது படம் தோல்வியானால் அதனால் துருவ்வின் சினிமா வாழ்வு பாதிக்கப்படாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

From around the web