வாவ்! என்ன ஒரு "கூல் போட்டோஸ்"

தனது நடிப்பாலும், திறமையாலும் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகர் விஷ்ணு விஷால்". நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய "வெண்ணிலா கபடி குழு" என்ற திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் நடிகர் சூரி, நடிகர் அப்புக்குட்டி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர் விஷ்ணு விஷால் "குள்ளநரி கூட்டம்"," கதாநாயகன்" போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "எஃப் ஐ ஆர்". "எஃப் ஐ ஆர்" திரைப்படமானது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான "கௌதம் வாசுதேவ் மேனன்" நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ரைசா, நடிகை மஞ்சிமா மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ஒரு சிங்கிள் ட்ராக் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது .
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ செய்துள்ளார். அந்த போட்டோ பார்க்கும்போது அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போட்டோ வைரலாக பரவுகிறது. அவரது ட்விட்டர் பக்கத்தில் லைக்ஸ் வந்த வண்ணமாகவே உள்ளது.
After finishing the dubbing of #FIR off to #Maldives....#MuchNeededBreak#VVgang#PaidHoliday #NotAHolidayPromotion 😆 pic.twitter.com/oWuyXA2F1J
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) February 22, 2021