வாவ்!வேற லெவல் கெட்டப்பா !

மாஸ் காட்டும் மலையாள நடிகரின் கெட்டப்...!
 
நடிகர் டொவினோ தோமஸின் ட்விட்டர்  பக்கம் கூறும் கருத்து...!

மலையாள சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் "டொவினோ தோமஸ்". இவர் "கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்","கல்கி" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள சினிமாவின் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரமான துல்கர்சல்மானுடன் "சார்லி", "ஏபிசிடி" போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tovino thomas

மேலும் இவர் மலையாள ஜாம்பவான் நடிகர் மோகன்லாலுடன் "லூசிபர்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தமிழில் இவர் அசுரன் நாயகனான நடிகர் தனுஷுடன் "மாரி 2" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு இவர் வில்லனாக தோன்றி அசர வைத்திருப்பார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "காலா" திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் "ரோகித்" இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில்   நடிகர் "டொவினோ தோமஸ்"உடன் பிரபல நடிகர் "லால்" இணைந்து நடிக்கின்றார்.இத்திரைப்படத்தினை பற்றிய சுவாரசியமான தகவல்கள் நடிகர் டொவினோ தோமஸ் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என படக்குழுவினராலும் ,ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் டொவினோ தோமஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடத்தின் கெட்டப்பை ஷேர் செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது திரைப்படத்தில் இவர் மாஸ் காட்ட உள்ளார் என ரசிகர்களால் நம்பப்பட்டு எதிர்பார்க்கப்படுகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

From around the web