மோசமான ரீமேக்: டுவிட்டர் பயனாளிகளின் ‘லட்சுமி’ விமர்சனம்

 
மோசமான ரீமேக்: டுவிட்டர் பயனாளிகளின் ‘லட்சுமி’ விமர்சனம்

நடிகர் நடன இயக்குனர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைbபடத்தின் இந்தி ரீமேக் படமான லட்சுமி என்ற திரைப்படம் நேற்று மாலை ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் மிகுந்த ஆவலுடன் முதல் நாளே பல ரசிகர்கள் இந்த படத்தை பார்த்தனர் 

ஆனால் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. காஞ்சனா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த காமெடி மற்றும் த்ரில் கேரக்டரில் அக்ஷய் குமார் கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்றும், இருப்பினும் அவர் அந்த கேரக்டரை முன்னிறுத்த  அக்ஷய் குமார் கஷ்டப்பட்டிருக்கிறார் என்றும் டுவிட்டர் பயனாளிகள் விமர்சனம் தெரிவித்துள்ளனர் 

lalkshmi

அதுமட்டுமின்றி கைரா அத்வானி கேரக்டர் சுத்த வேஸ்ட் என்றும் பின்னணி இசை படு மோசமாக இருந்தது என்றும், ஒரு திரைப்படத்திற்கு பின்னணி, நாயகி, எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த படம் என்றும் கருத்து தெரிவித்துளனர் 

மேலும் தமிழில் இருந்த விறுவிறுப்பாக த்ரில் மற்றும் காமெடி காட்சிகள் சுத்தமாக லட்சிமி படத்தில் இல்லை என்றும் குறிப்பாக காமெடி காட்சிகள் டோட்டலாக மிஸ்ஸிங் கமிஷன் என்றும் விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது 

தமிழில் கோவை சரளா நடித்த கேரக்டருக்கு இணையாக ஒரு கேரக்டரை ராகவா லாரன்ஸ் இந்தியில் கண்டு பிடிக்கவில்லை என்றும் அதுவே படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மொத்தத்தில் ஒரு மோசமான ரீமேக் படம் என்றும் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக டிவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web