செப்டம்பர் 17ஆம் தேதி பாஜகவில் இணைகிறாரா விஷால்? பரபரப்பு தகவல்

 

கடந்த சில நாட்களாக முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அந்த முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அந்த முன்னணி நடிகர் விஷால் என்று தெரியவந்துள்ளது

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும் இதற்காக ஏற்கனவே அவர் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்தித்து அனுமதி பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது 

ஆனால் இது குறித்து விஷால் மறுப்பு தெரிவித்து இருந்தாலும் விஷால் பாஜகவில் சேரப் போவது உறுதி என்று திரையுலக மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. விஷால் செப்டம்பர் 17ஆம் தேதி பாஜகவில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web