போடு! வேறலெவலா இருக்குப்பா போஸ்டர்...,

ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் பிரபல மலையாள நடிகர்...,
 
நடிகர் டொவினோ தோமஸின் ட்விட்டர் பக்கம் இருக்கும் போட்டோஸ்....,

தனது நடிப்பாலும் தனது அழகாலும் இளம் பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரபல மலையாள "நடிகர் டொவினோ தோமஸ்". இவர் "கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்", "கல்கி" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தின் கனவு நாயகனாக திகழும் துல்கர் சல்மானுடன் "சார்லி", "ஏபிசிடி" போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .  மேலும் இவர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்க இருக்கும் நடிகர் துல்கர் சல்மானின் "குர்ப்" என்ற படத்திலும் இவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tovino thomas

ஜாம்பவானாக திகழும் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் "லூசிபர்" என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் டொவினோ தோமஸ் தமிழில் "அசுரன்" நாயகனான நடிகர் தனுஷின் "மாரி 2" என்ற படத்தில் நடித்திருப்பார். "மாரி 2" என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு இவர் வில்லனாக தோன்றி அசர வைத்திருப்பார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு போஸ்டர்களை பதிவிட்டுள்ள இவர் மேலும் ஒரு சுவாரசியமான போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார். அந்த போஸ்டர் தான் நடித்துள்ள "காலா" படத்தின் போஸ்டர் என்பதால் அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

From around the web